புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முக்கியமான டிஜிட்டல் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது

Posted On: 26 SEP 2025 11:48AM by PIB Chennai

தரமான, எளிதில் அணுகக்கூடிய, செயற்கை நுண்ணறிவுக்கு தயாரான புள்ளியியலை நோக்கிய மாற்றத்தை முன்வைத்து இன்று நடைபெற்ற மத்திய, மாநில புள்ளியியல் அமைப்புகளின் 29-வது மாநாட்டில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்  முக்கியமான டிஜிட்டல் முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன் படி இந்தத் துறையின் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள mospi.gov.in என்ற எளிதில் அணுகக் கூடிய இணையதளம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களுக்கு தடையற்ற, பாதுகாப்பான, பயன்படுத்துவோருக்கு உகந்த தளமாக விளங்குகிறது.

ஏற்கனவே ஓசிஎம்எஸ் என்று அறியப்பட்ட இணையதளம் தற்போது தேசிய கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீட்டு உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு  https://.ipm.mospi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அணுகப்படுகிறது. இந்தப் புதிய இணையப் பக்கம் ரூ. 150 கோடி மற்றும் அதற்கு அதிக மதிப்புள்ள சாலை, ரயில்வே, பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி, நிலக்கரி, கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளின் திட்டங்களை தடையின்றி கண்காணிக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171577   

***

SS/SMB/SG/SH


(Release ID: 2171666) Visitor Counter : 3
Read this release in: English , Urdu , Marathi , Hindi