தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையதள குற்றங்களை தடுக்க தொலைத் தொடர்பு துறையும், நிதி புலனாய்வு பிரிவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

प्रविष्टि तिथि: 25 SEP 2025 3:32PM by PIB Chennai

இணைய தள குற்றங்களையும், அதன் மூலமான நிதி மோசடிகளையும் தடுக்கும் வகையில் மத்தியத் தொலைத் தொடர்புத்துறையும், இந்திய நிதி புலனாய்வு பிரிவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் தொலைத் தொடர்பு துறையின் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புலனாய்வு பிரிவின் துணை தலைமை இயக்குநர் திரு சஞ்ஜீவ் குமார் சர்மா, இந்திய நிதிப் புலனாய்வு பிரிவின் இயக்குநர் திரு அமித் மோகன் கோவில் ஆகியோர்  கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் திரு நீரஜ் மிட்டல், வருவாய்த்துறை செயலாளர் திரு அரவிந்த் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு நீரஜ் மிட்டல், இலக்குகளை அடைய பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நிதி மோசடிகளை தடுத்தல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிக பாதுகாப்பானதாக்குதல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு ஆகியவையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171135   

***

SS/PLM/AG/SH


(रिलीज़ आईडी: 2171460) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam