கலாசாரத்துறை அமைச்சகம்
பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் உட்பட சிறப்புக் கலைப் பொருட்கள் மின்னணு ஏலம் மூலம் விற்பனை
Posted On:
25 SEP 2025 2:40PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வடகிழக்கு இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான நினைவுப் பொருட்கள் உட்பட் 1,300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருட்கள் மின்னணு ஏலத்திற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அசாம், நாகாலாந்து, மேகாலயா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப்பிரதேச மாநிலங்களில் கைவினை கலைகள், பாரம்பரியம் மற்றும் கலாச்சார பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இந்த நினைவுப் பரிசுகள் உள்ளன. அக்டோபர் 2-ம் தேதி வரை pmmementos.gov.in என்ற இணையதள முகவரியில் நடைபெறும் இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்பதன் மூலம் நவாமி கங்கா திட்டத்திற்கு ஆதரவு வழங்க வாய்ப்பு ஏற்படும். இதில் கிடைக்கும் நிதி அனைத்தும் நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் முயற்சிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படும்.
நாகாலாந்து மாநில மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையிலான மரத்தால் செதுக்கப்பட்ட கலைப்பொருளான மிதுன், அம்மாநிலத்தில் ஜவுளிப் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் சால்வை, மேகாலயாவின் பாரம்பரிய கைவினைக் கலையை எடுத்துக் காட்டும் வகையில் மூங்கில் மற்றும் பிரம்பைப் பயன்படுத்தி செய்யப்படும் பாய்மரக்கப்பலின் மாதிரி வடிவத்திலான நினைவுப் பரிசு, அசாம் மாநிலத்தில் கருட முகம் கொண்ட சுவற்றில் பதிக்கப்படும் உருவம், அசாம் மாநிலத்தில் மூங்கில் மற்றும் பனை ஓலைகளால் நெய்யப்பட்ட கம்பளி, பட்டிலான அங்கவஸ்த்ரம், சிக்கிம் மாநிலத்தின் பித்தளையால் வடிவமைக்கப்பட்ட புத்தர் சிலை, அருணாச்சலப்பிரதேசத்தின் பாரம்பரிய மரத்திலான சிற்பம் இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171113
-----
SS/SV/KPG/SH
(Release ID: 2171456)
Visitor Counter : 7