நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி வாயுவாக்கம் தொடர்பான 2-வது விளக்க நிகழ்ச்சியை புதுதில்லியில் நடத்துகிறது நிலக்கரி அமைச்சகம்
प्रविष्टि तिथि:
25 SEP 2025 12:05PM by PIB Chennai
நிலக்கரி வாயுவாக்கம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் விளக்க நிகழ்ச்சிகளை (ரோடு ஷோ-Road Show) மத்திய நிலக்கரி அமைச்சகம் புதுதில்லியில் நாளை (26.09.2025) நடத்துகிறது. இதில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இணையமைச்சர் திரு சத்தீஷ் சந்திர துபே மற்றும் உயரதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவில் நிலக்கரி வாயுவாக்கத்தை மேம்படுத்துதல், இது தொடர்பான தொழில்நுட்பங்களை அதிகரித்தல், தனியார் முதலீட்டை ஊக்குவித்தல் போன்றவை குறித்து இந்த நிகழ்ச்சியில் ஆலோசிக்கப்படும். 2030-ம் ஆண்டு 100 மெட்ரிக் டன் நிலக்கரி வாயுவாக்கம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. இந்த பின்னணியில் நடைபெறவுள்ள இந்த விளக்க நிகழ்ச்சி, வேதியியல், பெட்ரோ ரசாயனம், எண்ணெய், எரிவாயு, அலுமினியம், எஃகு, மின்சாரம், நிலக்கரி உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பிரதிநிதிகளை ஒருங்கிணைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171043
***
SS/PLM/AG/SH
(रिलीज़ आईडी: 2171428)
आगंतुक पटल : 32