பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணியிடங்களில் தூய்மையைப் பராமரிப்பது திறமையான ஆக்கப்பூர்வமான பணிச்சூழலுக்கு உதவிடும்- மத்திய அமைச்சர் திருமதி அன்னப்பூரணா தேவி

प्रविष्टि तिथि: 25 SEP 2025 11:27AM by PIB Chennai

தூய்மைப் பணிகளுக்கான பிரச்சார இயக்கம் 5.0-ன் கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அலுவலக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை அத்துறைக்கான மத்திய அமைச்சர் திருமதி அன்னப்பூரணா தேவி இன்று ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திருமதி அன்னப்பூரணா தேவி பகிர்ந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

பணியிடங்களில் தூய்மையைப் பராமரிப்பது திறமையான மற்றும் ஆக்கப்பூர்வமான பணிச்சூழலுக்கு உதவிடும். இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களும் தூய்மைப் பணிகளை பண்பாட்டு நடவடிக்கையாக மேற்கொள்வதில் உறுதியுடன் உள்ளது.

தூய்மைக்கான இயக்கத்தின் சிறப்பு பிரச்சார இயக்கம் 5.0-ன் கீழ், அலுவலக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பராமரிப்பு நடவடிக்கைகளை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171008

----

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2171413) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR