குடியரசுத் தலைவர் செயலகம்
64-வது தேசிய கலைக்கண்காட்சியின் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்
प्रविष्टि तिथि:
24 SEP 2025 1:40PM by PIB Chennai
புதுதில்லியில் லலித் கலா அகாடமி இன்று (24.09.2025) ஏற்பாடு செய்திருந்த 64-வது தேசிய கலைக்கண்காட்சியின் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
இந்த விழாவில் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த குடியரசுத் தலைவர், அவர்களின் கலை படைப்புகள் மற்ற கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய பாரம்பரியத்தில் நீண்ட காலமாக கலை ஒரு ஆன்மீக நடைமுறையாக கருதப்பட்டு வருகிறது என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார். கலை என்பது அழகுணர்வை பாராட்டுவதற்கான வழிமுறை மட்டுமல்ல, அது நமது கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்தவும், மிகவும் உணர்வு பூர்வமான சமூகத்தை வளர்க்கவும் பயன்படுகின்ற சக்திவாய்ந்த கருவியாகும். கலைஞர்கள் தங்களின் எண்ணங்கள், பார்வை மற்றும் கற்பனை மூலம் புதிய இந்தியாவின் தோற்றத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் கூறினார்.
கலைஞர்கள் தங்களின் நேரம், சக்தி மற்றும் வளங்களை முதலீடாக்கி கலையை உருவாக்குகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், அவர்களின் கலைப்படைப்புகளுக்கு நியாயமான விலை கிடைப்பது அவர்களை ஊக்கப்படுத்துவதோடு கலையை ஒரு தொழிலாக தொடரவும் உதவும் என்று கூறினார். கலைப்படைப்புகளை விற்பனை செய்ய லலித் கலா அகாடமி ஊக்குவிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், இது கலைஞர்களுக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதோடு படைப்பாக்க பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்றார். பொருளாதாரம் மற்றும் கலாச்சார சக்தியாக இந்தியாவின் அடையாளத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடு பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
***
(Release ID: 2170520 )
SS/SMB/AG/SH
(रिलीज़ आईडी: 2170871)
आगंतुक पटल : 39