வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா- பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை அம்சங்கள் பற்றிய கருத்தரங்கு
Posted On:
24 SEP 2025 11:01AM by PIB Chennai
இந்தியா- பிரிட்டன் விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை அம்சங்கள் பற்றி தெளிவுபடுத்துவதற்கான கருத்தரங்கு புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை, வர்த்தக துறை ஆகியவை வர்த்தக மற்றும் முதலீட்டு சட்ட மையத்துடன் இணைந்து இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் கொள்கை வகுப்போர், துறைசார்ந்த நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
புத்தாக்க வளர்ச்சி மற்றும் அணுகலை உறுதிசெய்தல் ஆகியவற்றிற்கிடையே கவனமாக சமநிலையை அறிவுசார் சொத்துரிமை பிரிவு கொண்டிருப்பதை இந்தக் கருத்தரங்கு நிபுணர்கள் கோடிட்டு காட்டினர். இந்தியாவில் அறிவுசார் சொத்து கட்டமைப்பை நவீனமாக்கும் அதே வேளையில், பொது சுகாதாரத்திற்கான பாதுகாப்பை இந்தப்பிரிவு வலியுறுத்துவதாக அவர்கள் கூறினர். இந்தியாவின் கொள்கைப் பரப்பை அறிவுசார் சொத்துரிமைப்பிரிவு முடக்குவதாக கூறப்படுவதை கருத்தரங்கு அமர்வுகள் நிராகரித்து தெளிவுபடுத்தின.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170457
***
SS/SMB/AG/KR
(Release ID: 2170671)
Visitor Counter : 4