ஜவுளித்துறை அமைச்சகம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் தூய்மைப் பணி நடைபெற்றது
Posted On:
24 SEP 2025 11:19AM by PIB Chennai
தூய்மையே சேவை 2025 இயக்கத்தின் ஒரு பகுதியாக மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்கள், நாடு முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டது. பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியம், மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தது.
அலுவலக வளாகத்தை அழகு படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கைவினைப் பொருள் மேம்பாட்டு ஆணைய அலுவலகம் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை 23.09.2025 அன்று நடத்தியது. கைத்தறி மேம்பாட்டு ஆணைய அலுவலகம், புவனேஷ்வர் நெசவாளர்கள் சேவை மையத்துடன் இணைந்து சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது. நாடியா மாவட்டத்தின் பெத்துவாதஹரியில் பொது இடங்களை தூய்மைப் படுத்துதல் இயக்கத்தின் கீழ் ரயில் நிலையம் மற்றும் ரயில் தடத்தில் இந்திய சணல் கழக நிறுவனத்தின் மண்டல அலுவலகம் சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது.
***
SS/IR/KPG/KR
(Release ID: 2170571)
Visitor Counter : 5