தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரபல திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான திரு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Posted On: 20 SEP 2025 7:52PM by PIB Chennai

பிரபல திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான திரு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த உயரிய விருதை மத்திய அரசு திரு மோகன்லாலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறையில் அவரது போற்றத்தக்க பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் திரு மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்திய திரைப்படத் துறையில் திரு மோகன்லாலின் தனித்துவமான செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில் இந்த விருதை அவருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“லாலேட்டன் திரு மோகன்லால் @Mohanlal அவர்களுக்கு வாழ்த்துகள்.

அழகு கொஞ்சும் கேரளா மாநிலத்திலிருந்து உலகெங்கும் உள்ள பார்வையாளர்கள் வரை, அவரது படைப்புகள் நமது கலாச்சாரத்தைக் கொண்டாடுவதுடன், நம் விருப்பங்களையும் பிரதானமாகக் காட்சிப்படுத்துகின்றன.

அவரது புகழ், இந்தியாவின் படைப்பாற்றல் உணர்வைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2169029  

 

(Release ID: 2169029)

***

AD/RB


(Release ID: 2170413) Visitor Counter : 4