பாதுகாப்பு அமைச்சகம்
தமிழக அரசும், மசஹான் கப்பல் கட்டுமான நிறுவனமும் இணைந்து உலகத்தரம் வாய்ந்த பசுமை கப்பல் கட்டுமான நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
23 SEP 2025 5:26PM by PIB Chennai
நாட்டின் கிழக்கு கடற்கரையில் உலகத்தரம் வாய்ந்த பசுமை கப்பல் கட்டுமான நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான மசஹான் கப்பல் கட்டுமான நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு இடையே 2025 செப்டம்பர் 19 அன்று கையெழுத்தானது.
குஜராத்தின் பாவ்நகரில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம் இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் மசஹான் கப்பல் கட்டுமான நிறுவன இயக்குநர் திரு பிஜூ ஜார்ஜ் தமிழ்நாடு வழிகாட்டுதல் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான டாக்டர் தாரேஷ் அஹமத் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப்போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கலந்து கொண்டார்.
***
(Release ID: 2170194)
AD/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2170404)
आगंतुक पटल : 33