கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் மற்றும் ஹெச்டி கொரியா நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
23 SEP 2025 1:44PM by PIB Chennai
கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் தற்சார்பு இந்தியா என்ற நிலையை நோக்கி செல்கிறது. இது கப்பல் கட்டுமானத்தின் நீண்டகால உத்திசார்ந்த ஒருங்கிணைப்புக்காக ஹெச்டி கொரியா கப்பல் கட்டுமானம் மற்றும் கடற்கரை பொறியியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 செப்டம்பர் 20 அன்று குஜராத்தின் பாவ்நகரில் இந்தியாவின் மாற்றமிக்க கடல்சார்துறை என்ற நிகழ்வை தொடங்கிவைத்த போது இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
அப்போது மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் ஆகியோர் உடனிருந்தனர். ஹூண்டாய் உலகளாவிய வர்த்தக மேலாண்மைப் பிரிவு தலைவர் திரு ஜங் ஜாங்கின், கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் முதன்மை மேலாண் இயக்குநர் திரு மது எஸ் நாயர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170036
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2170381)
आगंतुक पटल : 35