தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் 2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர் சேர்ப்பு
Posted On:
23 SEP 2025 12:23PM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் வெளியிடப்படும் பகுப்பாய்வு தரவுகளை 2024 ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடும் போது நிகர சம்பள பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் தொடர் முயற்சிகள், வலுவான கூடுதல் வேலைவாய்ப்புகள் மற்றும் பணியாளர் நலன் குறித்த விழிப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக இது அமைந்துள்ளது. 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டுள்ள சம்பள பட்டியலில் உள்ள தரவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-
புதிய சந்தாதாரர்கள்:
2025 ஜூலை மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 9.79 லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது. அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள், தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் வெற்றிகரமான திட்டங்கள் ஆகியவை இதற்கு காரணமாகும்.
சம்பள பட்டியலில் 18-25 வயதுக்கு உட்பட்டவர்கள் முன்னணியில் உள்ளனர். இந்தப் பிரிவில் 5.98 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இது 2025 ஜூலை மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 61.06 சதவீதம் ஆகும்.
மாநிலம் வாரியான பங்களிப்பு:
மாநிலம் வாரியாக சம்பள பகுப்பாய்வு பட்டியலில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 60.85 சதவீத புதிய உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பை கொண்டுள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலம் 20.47 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை பங்களிப்பை பெற்று முன்னணியில் உள்ளது.கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, புதுதில்லி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஜூலை மாதத்தில் 5 சதவீதத்துக்கும் அதிக உறுப்பினர் சேர்க்கையை கொண்டுள்ளன.
***
(Release ID: 2169975)
SS/GK/AG/KR
(Release ID: 2170087)