ஜவுளித்துறை அமைச்சகம்
2025-ம் ஆண்டுக்கான தூய்மை சேவை இயக்கத்தை ஜவுளித்துறை அமைச்சகம் நடத்தியது
Posted On:
23 SEP 2025 10:04AM by PIB Chennai
இந்திய சணல் கழகம் மண்டல அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட தூய்மை சேவை இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், சேவைகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் மும்பை ஜவுளி கமிட்டி உள்ளூர் மற்றும் மண்டல அளவில் கலை, கலாச்சாரம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் சார்பில் தூய்மைப்பணிகள் நடைபெற்றன. 2025 செப்டம்பர் 22-ம் தேதி காலை 11.00 மணி முதல் தலைமையகத்தில் உள்ள அனைத்து அலுவலக வளாகமும் சுத்தம் செய்யப்பட்டன. மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2169917
***
(Release ID: 2169917)
SS/GK/AG/KR
(Release ID: 2169981)
Visitor Counter : 3