பாதுகாப்பு அமைச்சகம்
கார்கிலில் ₹1,200 கோடி உள்கட்டமைப்பு திட்டங்களுடன் 15-வது நிறுவன தினத்தை கொண்டாடியது ப்ராஜெக்ட் விஜயக்
प्रविष्टि तिथि:
21 SEP 2025 12:07PM by PIB Chennai
எல்லைச் சாலைகள் அமைப்பின் (BRO) ப்ராஜெக்ட் விஜயக் திட்டம், இன்று (2025 செப்டம்பர் 21) லடாக்கின் கார்கிலில் தனது 15-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. அதன் 16-வது ஆண்டில் நுழையும் போது ₹1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களை இத்திட்டம் கொண்டுள்ளது. இந்த மைல்கல் நிகழ்வு உலகின் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேவை, மீள்தன்மை, பொறியியல் சிறப்பின் பயணத்தைக் குறிக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில், இந்த திட்டத்தில், லடாக் முழுவதும் 1,400 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகளையும் 80 முக்கிய பாலங்களையும் கட்டி பராமரிக்கிறது.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் விஜயக் திட்டம், லடாக்கின் தொலைதூரப் பள்ளத்தாக்குகளை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதே முக்கிய பணியாகும். அதே நேரத்தில் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இதன் பங்களிப்புகள் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், லடாக் மக்களுக்கான போக்குவரத்து இணைப்பையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் சிறப்பாக மாற்றியுள்ளன.
***
(Release ID: 2169168)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2169247)
आगंतुक पटल : 16