பாதுகாப்பு அமைச்சகம்
நாடு முழுவதும் 26,000 தன்னார்வலர்களுடன் சர்வதேச கடலோர தூய்மை தினத்தைக் கொண்டாடியது இந்திய கடலோரக் காவல் படை
Posted On:
21 SEP 2025 12:17PM by PIB Chennai
இந்திய கடலோரக் காவல்படை (ICG) 2025 செப்டம்பர் 20 அன்று நாடு தழுவிய அளவில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினத்தை கொண்டாடியது. தேசிய மாணவர் படையினர், சாரணர் இயக்க உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 26,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக பங்கேற்றனர். கடலோர சூழல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க கடல் குப்பைகளை அகற்றினர். நிலையான தூய்மை நடைமுறைகளின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியது.
செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலக அளவில் அனுசரிக்கப்படும் இந்த முயற்சி, பெருமளவிலான சமூக பங்கேற்பு மூலம் கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுகிறது. இந்த இயக்கம், இந்தியாவில் 11,000 கிலோ மீட்டர் கடற்கரையைப் பாதுகாப்பதற்கும், தூய்மை இந்தியா இயக்கத்தின் இலக்குகளை அடைவதற்குமான நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
***
(Release ID 2169171)
AD/PLM/RJ
(Release ID: 2169239)
Visitor Counter : 4