புவி அறிவியல் அமைச்சகம்
இந்தியப் பெருங்கடலில் உள்ள கார்ல்ஸ்பெர்க் கரையோரத்தில் பாலிமெட்டாலிக் சல்பைடுகள் பற்றி ஆய்வு செய்ய சிறப்பு உரிமைகளை இந்தியா பெற்றுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
20 SEP 2025 4:11PM by PIB Chennai
இந்தியப் பெருங்கடலில் உள்ள கார்ல்ஸ்பெர்க் கரையோரப் பகுதியில் 10,000 சதுர கி.மீ பரப்பளவில் பாலிமெட்டாலிக் (பல உலோகங்களின் கூறுகளைக் கொண்ட) சல்பைடுகள் பற்றி ஆய்வு செய்வதற்கான சிறப்பு உரிமைகளுக்காக மத்திய புவி அறிவியல் அமைச்சகம், சர்வதேச கடற்படுகை ஆணையம் இடையே 15 ஆண்டு புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பாலிமெட்டாலிக் சல்பைடுகள் ஆய்வுக்காக சர்வதேச கடற்படுகை ஆணையத்துடன் இரண்டு ஒப்பந்தங்களை வைத்திருக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இது ஆழ்கடல் வள ஆராய்ச்சியில் அதன் முன்னோடிப் பங்கையும், இந்தியப் பெருங்கடலில் அதன் உத்திசார் நிலையையும் மீண்டும் உறுதிசெய்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஆழ்கடல் பயணத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்தப் புதிய ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடாகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இது கடலின் அடிப்பகுதி கனிம ஆய்வு, சுரங்கத் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இந்தியாவின் 'நீலப் பொருளாதார முயற்சிகளை' வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
பாலிமெட்டாலிக் சல்பைடுகள் இரும்பு, தாமிரம், துத்தநாகம், வெள்ளி, தங்கம், பிளாட்டினம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் உத்தி சார்ந்த மற்றும் வணிக ஆற்றல் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது, இந்தியாவை ஆழ்கடல் வள ஆராய்ச்சியில் முன்னணியில் வைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2168923
***
AD/SMB/RJ
(Release ID: 2169031)