பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறப்பு பிரச்சாரம் 5.0-க்கான ஆயத்த கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன
Posted On:
20 SEP 2025 4:22PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறை தீர்ப்புத் துறையை மையமாகக் கொண்டு அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு பிரச்சாரம் 5.0, அதன் ஆயத்த கட்டத்தில் குறிப்பிடத்தக்க வேகத்தை பெற்றுள்ளது. சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் செயல்பாட்டுக் கட்டம், 2025 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2025 வரை நடைபெறும். அதற்கு முன்னதாக தயாரிப்பு கட்டம் 2025 செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெறுகிறது.
இந்தக் கட்டத்தில், அமைச்சகங்கள்/துறைகள், இணைக்கப்பட்ட/சார்பு அலுவலகங்கள்/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள தங்கள் அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து, பிரச்சாரத்தில் அவர்களின் பங்கு குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன. களப் பணியாளர்களைத் திரட்டுதல், நிலுவையில் உள்ள கோப்புகளை அடையாளம் காணுதல், தூய்மை இயக்கத்திற்கு அலுவலகங்களின் பட்டியலை இறுதி செய்தல், அப்புறப்படுத்த வேண்டிய மின்னணு/வாகன/அலுவலக கழிவுகளின் அளவை மதிப்பிடுதல், அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகளை இறுதி செய்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடங்கும். அலுவலக இடங்களை மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறைகள், கழிவுகளை அகற்றுவதற்கான நடைமுறைகள், சுகாதார நெறிமுறைகள், உள்ளடக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் முன்னேற்றம் ஒரு பிரத்யேக இணையதளமான https://scdpm.nic.in/specialcampaign5/ என்ற தளம் மூலம் கண்காணிக்கப்படுகிறது . அனைத்து அமைச்சகங்கள்/துறைகளும் சிறப்பு பிரச்சாரம் 5.0-ன் இணையதளத்தில் பிரச்சாரத்தின் தயாரிப்பு கட்டத்திற்கான இலக்குகளை பதிவேற்ற வேண்டும். ஆயத்த கட்டம் 2025 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது.
***
(Release ID: 2168930)
AD/PLM/RJ
(Release ID: 2169016)