பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய - கிரீஸ் கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது கூட்டு கடற்படைப் பயிற்சி நிறைவு
Posted On:
20 SEP 2025 4:29PM by PIB Chennai
இந்திய கடற்படைக்கும் ஹெலனிக் (கிரீஸ்) கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியின் முதல் பதிப்பு 2025 செப்டம்பர் 18 அன்று மத்தியதரைக் கடல் ப குதியில் நிறைவடைந்தது. இது இந்தியாவிற்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. துறைமுக கட்டம் 2025 செப்டம்பர் 13 முதல் 17 வரை சலாமிஸ் கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடல்சார் கட்டம் 2025 செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் இந்தியா சார்பில் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் திரிகண்ட் பங்கேற்றது. துறைமுக கட்டத்தில், இரு கடற்படைகளின் பணியாளர்களும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடல்சார் கட்டத்தில் சிக்கலான கடல்சார் உத்திகள் தொடர்பான பயிற்சிகள் நடைபெற்றன.
முதல் இருதரப்புப் பயிற்சியின் இந்த வெற்றிகரமான நிறைவு, இந்தியா மற்றும் கிரீஸின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கிறது. உலகளாவிய கடல்சார் சூழலில் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் கடல்சார் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன. சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், செயல்பாட்டுத் தன்மையை ஊக்குவிப்பதற்கும், இரு கடற்படைகளுக்கும் இடையே தொழில்முறை உறவை மேம்படுத்துவதற்கும் இந்த ஒத்துழைப்பு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கியது.
***
(Release ID: 2168932)
AD/PLM/RJ
(Release ID: 2168998)