இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையை மேம்படுத்துவதற்கும் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் சிறப்பு பிரச்சாரம் 5.0-ல் விளையாட்டுத் துறை பங்கேற்கிறது.

Posted On: 20 SEP 2025 9:31AM by PIB Chennai

தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 4.0-ன் குறிப்பிடத்தக்க சாதனைகளைத் தொடர்ந்து மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள் 2022-க்கு இணங்க பொறுப்பான மேலாண்மை மற்றும் அறிவியல் பூர்வமாக மின்னணுக் கழிவுகளை அகற்றுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் அர்ப்பணிப்புடன், சிறப்பு இயக்கம் 5.0-ன் ஆயத்த கட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை தொடங்கியுள்ளது.

 சிறப்பு இயக்கம் 4.0-ன்  போது இந்தத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களின் கள அலுவலகங்கள் மற்றும் தலைமையகங்களை உள்ளடக்கி அடையாளம் காணப்பட்ட 44 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக 12,000 சதுர அடி இடம் மீட்கப்பட்டது, புதிதாகக் கிடைத்த பல பகுதிகள் மதிப்புமிக்க பயன்பாட்டு இடங்களாக மீண்டும் பயன்படுத்தப்பட்டன. கழிவுகளை அகற்றியதன் மூலம்  ரூ. 1,76,000 வருவாய் ஈட்டப்பட்டது.

பணியிட தூய்மையில் உயர் தரங்களை நிறுவுவதையும், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்த்தல் துறையால் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதையும் நோக்கமாகக் கொண்டு, சிறப்பு இயக்கம் 5.0- மிகத் தீவிரமாக  செயல்படுத்த விளையாட்டுத் துறை தயாராக உள்ளது.

***

(Release ID: 2168841)

AD/SMB/RJ


(Release ID: 2168938)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati