ஜல்சக்தி அமைச்சகம்
தூய்மையே சேவை 2025-க்கான இயக்கம் தொடங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மைக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்
Posted On:
19 SEP 2025 2:12PM by PIB Chennai
தூய்மையே சேவை 2025-க்கான இயக்கத்தின் கீழ், நதி நீர் மேம்பாடு மற்றும் கங்கை நதி புனரமைப்புப் பணிகளுக்கான பிரச்சாரத்தை தூய்மைத் திருவிழா என்ற பெயரில் மத்திய நீர்வளத்துறை தொடங்கியுள்ளது. செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்தப் பிரச்சாரத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன், தூய்மைப் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் மக்கள் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மைக்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீர்வளத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சார இயக்கம் சுற்றுப்புறங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கும், சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் நீடித்த மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை ஒருங்கிணைந்து பராமரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
----
SS/SV/KPG/KR/SH
(Release ID: 2168805)