தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் மக்கள் சிலர் ஒரு பெண்ணை உயிருடன் எரித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
Posted On:
18 SEP 2025 3:28PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் செப்டம்பர் 6, 2025 அன்று ஒரு பெண்ணை மக்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஒரு பெண் தன் மகளுக்கு மருந்து வாங்கச் சென்றபோது, மக்கள் சிலரால் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்த செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்த ஆணையம், இச்சம்பவம் உண்மையாக இருந்தால், இதை ஒரு கடுமையான மனித உரிமை மீறலாகக் கருதப்படும் என கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தும் இந்த அறிக்கையில், சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
SS/SE/KR
(Release ID: 2168351)