பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருமுறை தெரிவு செய்யும் வாய்ப்பு
Posted On:
18 SEP 2025 4:06PM by PIB Chennai
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு விருப்பமாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்பாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சலுகைகள் தொடர்பான சேவை அம்சங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையால் மத்திய குடிமைப்பணிச் சேவைகள் (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல்) விதிகள், 2025, 02.09.2025 அன்று அறிவிக்கப்பட்டது.
இந்த விதிகளில், நிர்ணயிக்கப்பட்ட 30.09.2025 காலக்கெடுவிற்குள், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அதிலிருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒருமுறை தெரிவு செய்வதற்கான விருப்பங்களும் இதில் அடங்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்களுக்கு பின்வரும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஒரு முறை மட்டுமே தெரிவு செய்ய முடியும். மீண்டும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை தெரிவு செய்ய முடியாது.
குறைந்தது ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்பாகவோ அல்லது தன்விருப்ப ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவோ தெரிவு செய்ய வேண்டும்.
பணியிலிருந்து நீக்கப்படுதல் அல்லது அபராதமாக கட்டாய ஓய்வளித்தல் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைகள் நடைபெறுதல் ஆகிய நிகழ்வுகளில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதி அனுமதிக்கப்பட மாட்டாது.
குறிப்பிட்ட நாளுக்குள் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்வார்கள்.
----
SS/IR/KPG/SH
(Release ID: 2168324)