கலாசாரத்துறை அமைச்சகம்
சேவைத் திருவிழா 2025: வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படைப்பாக்க வெளிப்பாடுகளில் தேசம் ஒருங்கிணைந்துள்ளது
Posted On:
18 SEP 2025 3:08PM by PIB Chennai
சேவை, படைப்பாக்கம், கலாச்சார பெருமிதம் ஆகியவற்றுக்கான நாடு தழுவிய விழாவாக 2025 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சேவைத் திருவிழா 2025-ஐ மத்திய கலாச்சார அமைச்சகம் கொண்டாடுகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க தனிநபர்கள், சமூகங்கள், நிறுவனங்கள் இந்தத் திருவிழாவில் ஒருங்கிணைந்துள்ளனர்.
வண்ணங்கள் மற்றும் கலை சங்கமத்துடன் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற மையப்பொருளுடன் விழாவின் தொடக்க நாளில் (17.09.2025) நாடு முடுவதும் 75 முக்கியமான இடங்களில் ஓவியம் மற்றும் கலைப்பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் தொழில்முறையிலான ஓவியர்கள், மாணவர்கள், பொது மக்கள் பங்கேற்று தங்களின் கண்ணோட்டத்தை கலைப்படைப்புகளாக தந்தனர்.
லக்னோ, வதோதரா, ஆனந்த், ஐதராபாத், தாமோஹ் (மத்தியப் பிரதேசம்), சாந்தி நிகேதன் (மேற்கு வங்கம்), ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்டவற்றில் இந்தப் பயிலரங்குகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தொழில்முறை ஓவியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மூத்த ஓவியர்கள், பேராசிரியர்கள் நடுவர்களாக இருந்து இவற்றை மதிப்பீடு செய்தனர்.
2025 அக்டோபர் 02 வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவை தனிநபர்களும், கலைப்படைப்புகள், புகைப்படங்கள் போன்றவற்றை #SewaParv என்ற சமூக ஊடகத்தை பயன்படுத்தி பகிர்ந்துகொள்ளலாம். அல்லது https://amritkaal.nic.in/sewa-parv-individual-participants என்ற இணைய தளத்திலும் பதிவேற்றலாம்.
***
SS/SMB/AG/KR/SH
(Release ID: 2168321)