தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சத்தீஷ்கர் ராய்ப்பூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில் உரிமைக் கோரப்படாத உடல்கள் பெருமளவில் உள்ளதாக கூறப்படுவதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது

प्रविष्टि तिथि: 18 SEP 2025 2:37PM by PIB Chennai

சத்தீஷ்கர் ராய்ப்பூர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில் அடையாளம் தெரியாத உடல்கள் பெருமளவில் உள்ளதாக கூறப்படுவதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு இடம் ஒதுக்கப்படாததால் இந்த உடல்கள் தேங்கிக் கிடப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. கடந்த வாரத்திலிருந்து பிரேதப் பரிசோதனைக்காக கூட 3 உரிமை கோரப்படாத உடல்கள் அனுப்பப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊடகங்களில் வெளியான இச்செய்தி உண்மையெனில் அது மனித உரிமைகளை மீறுவதாக ஆணையம் கருதுகிறது.  இதையடுத்து, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சத்தீஷ்கர் மாநில தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

*** 

SS/IR/KPG/KR/SH


(रिलीज़ आईडी: 2168290) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी