ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் துறையில் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவது தரமான சேவைகளையும், அணுகலையும் அதிகரிக்கும்: வைத்ய ராஜேஷ் கொட்டேச்சா

Posted On: 18 SEP 2025 2:20PM by PIB Chennai

ஆயுஷ் துறையில் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவது தரமான சேவைகளையும், அணுகலையும் அதிகரிக்கும் என்று மத்திய ஆயுஷ்துறை செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேச்சா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் குமாரகோமில் இன்று தொடங்கிய “ஆயுஷ் துறையில் தகவல் தொழில்நுட்ப தீர்வுகள்” என்பது குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கில் முக்கிய உரையாற்றிய அவர், ஆயுஷ் தொகுப்பு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட புதிய டிஜிட்டல் இணையப் பக்கங்கள், போலிகளை தவிர்க்க தரப்படுத்தும் மென்பொருள் போன்ற ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.  இந்த டிஜிட்டல் புத்தாக்கங்களை பயன்படுத்தி தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்திற்கு இணங்க தங்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று  பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கேரள அரசின் சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் திருமதி வீணா ஜார்ஜ் இந்தப் பயிலரங்கை தொடங்கிவைத்தார். நிகழ்நேர கண்காணிப்பு, மனித ஆற்றல் நிர்வாக விரிவாக்கம், வலுவான தரவு கட்டமைப்புகள், வெளிப்படையான நிதித்தடம் அறிதல் போன்றவற்றிற்கு டிஜிட்டல் கருவிகள் முக்கியமானவை என்று அவர் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்தப் பயிலரங்கில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 91 பிரதிநிதிகளும், மூத்த அதிகாரிகள்,  தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்போர் உள்ளிட்ட 155 பங்கேற்பாளர்களும் ஒருங்கிணைந்துள்ளனர்.

 

***

SS/SMB/AG/SH


(Release ID: 2168286)
Read this release in: English , Urdu , Hindi , Malayalam