பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான தெரிவை மத்திய குடிமைப் பணி விதிகள், 2025 வழங்குகின்றன
प्रविष्टि तिथि:
18 SEP 2025 4:06PM by PIB Chennai
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டப் பயன்களை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவது தொடர்பாக பணி வரைமுறை செய்வதற்கான மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அமலாக்கம்) விதிகள் 2025-ஐ 2.09.2025 அன்று மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
அரசுப் பணியில் 20 ஆண்டுகள் நிறைவு செய்தபின், விருப்ப ஓய்வு பெறுவதை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் தெரிவு செய்ய இந்த விதிகள் வகை செய்கின்றன.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின் மட்டுமே முழுமையான ஓய்வூதியப் பயன்கள் கிடைக்கும். இருப்பினும் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக பணி நிறைவு செய்து விருப்ப ஓய்வு கோருவோருக்கு முழுமையான ஓய்வூதியப் பயன்கள் 25-ஆல் வகுக்கப்பட்டு சந்தாதாரருக்கு வழங்கப்படும்.
***
(Release ID: 2168064)
SS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2168164)
आगंतुक पटल : 71