தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் ஆரோக்கியமான மகளிர், வலிமையான குடும்பம் இயக்கத்தின் கீழ் சுகாதார முகாம்கள் தொடங்கப்பட்டது

Posted On: 18 SEP 2025 1:48PM by PIB Chennai

ஆரோக்கியமான மகளிர், வலிமையான குடும்பம் இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் சுகாதார இயக்கத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்தி வருகிறது. இந்த இயக்கம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறுகிறது. இந்த இயக்கத்தில் பங்கு பெறும் வகையில், நாடு முழுவதும் உள்ள 160 இஎஸ்ஐசி மருத்துவமனைகளில் விரிவான சுகாதார முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் நாளன்று, ஃபரிதாபாதில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மகளிர் சுகாதாரம், நோய்த்தடுப்பு, மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமை பேராசிரியரும், மருத்துவமனைத் தலைவருமான டாக்டர் பூஜா கோயல் மற்றும் சமூக மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ரோஹித் தாக்கா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  அத்துடன் ரத்த தான முகாமும் நடைபெற்றது.

தொழிற்சாலை சுகாதார முகாம்கள், ஷகி ஏற்றுமதி தனியார் நிறுவனம், துருவ் குளோபல் நிறுவனம் ஆகிய இடங்களில் நடைபெற்றன. தொற்றல்லா நோய், காசநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து பெண்களுக்கு கேள்வி பதில் அடிப்படையில் விளக்கப்பட்டது.

ஐதராபாத் சனத்நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட கட்டடத்தில் செப்டம்பர் 17 அன்று சிகிச்சைக்கான முகாம் சேவைகள் தொடங்கப்பட்டது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167985

-----

SS/IR/KPG/KR


(Release ID: 2168136)
Read this release in: English , Urdu , Hindi , Telugu