பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் 14-வது ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2025 12:13PM by PIB Chennai
புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் 10.9.2025 அன்று 14-வது ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஓய்வூதியர்களின் குறைகளுக்கு விரைவாகவும் பயனுள்ள வகையிலும் தீர்வுகாண அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முழுமையான அரசு அணுகுமுறையுடன் ஓய்வூதியர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த முகாமின் போது, பாதுகாப்பு, உள்துறை, நிதி, ரயில்வே உள்ளிட்ட 21 துறைகள்/அமைச்சகங்களைச் சேர்ந்த முதுநிலை ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தொடர்பான 894 கோரிக்கைகள் பெறப்பட்டு 652 கோரிக்கைகளுக்கு நிகழ்விடத்திலேயே தீர்வு காணப்பட்டன. ஓய்வூதியதாரர்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கும் முன்முயற்சியாக இது அமைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167059
***
SS/SMB/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2167185)
வருகையாளர் எண்ணிக்கை : 23