சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் இந்தியா முதலிடம் பிடிப்பதே இலக்கு- அமைச்சர் நிதின் கட்கரி
Posted On:
15 SEP 2025 5:03PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற சர்வதேச மதிப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, ஆட்டோமொபைல் உற்பத்தி, பசுமை இயக்கம் மற்றும் உள்கட்டமைப்பு கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவை சர்வதேச அளவில் முன்னணி மையமாக நிலைநிறுத்தும் திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்தியா தற்போது உலகளவில் ஜப்பானை பின்தள்ளி 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக உருவெடுத்துள்ளதாக கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முதலிடம் பிடிப்பதை இலக்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் அனைத்து முக்கிய ஆட்டோமொபைல் தயாரிப்புகளும் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும், சர்வதேச நிறுவனங்களின் தற்போதைய கவனம் வாகன உற்பத்தியில் இருந்து மாறி, இந்தியாவிலிருந்து வாகனங்களை சர்வதேச அளவிற்கு ஏற்றுமதி செய்வதாக மாறியுள்ளதாக கூறினார்.
இந்திய இருசக்கர வாகன உற்பத்தித்துறை மட்டும் அதன் உற்பத்தியில் 50 சதவீதத்தை ஏற்றுமதி செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இது, இந்தியா உலகளவில் வளர்ந்துவரும் நிலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுத்தமான வாகன போக்குவரத்து குறித்து பேசிய அமைச்சர் கட்கரி, ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் லாரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், மேலும் 10 வழித்தடங்களில் முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் கூறினார். உலகை பசுமை இயக்கத்தின் கீழ் வழிநடத்துவதே தங்களின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
***
SS/GK/LDN/KR
(Release ID: 2166973)
Visitor Counter : 2