புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் குறித்த 2025 ஆகஸ்ட் மாதாந்திர அறிக்கை

प्रविष्टि तिथि: 15 SEP 2025 4:00PM by PIB Chennai

நாட்டின் தொழிலாளர் குறித்த 2025 ஆகஸ்ட் மாதாந்திர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர் சந்தை நேர்மறையான தருணத்தை குறிக்கிறது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் (15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்துள்ளது. 2025 ஜூன் மாதத்தில் 5.6 சதவீதமாகவும், 2025 ஜூலை மாதத்தில் 5.2 சதவீதமாகவும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் 5.1 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது. ஆண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 மாதங்களில் குறைவாக 2025 ஆகஸ்ட் மாதத்தில்  5 சதவீதமாக இருந்தது. பெண் பணியாளர் விகிதம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 30.2 சதவீதமாகவும், ஜூலை மாதத்தில் 31.6 சதவீதமாகவும் இருந்தது.

 

***

SS/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2166911) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी