தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உத்தரப்பிரதேசத்தில் இந்தியத் தொலைத் தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் நெட்வொர்க் தரம் குறித்த ஆய்வு
Posted On:
15 SEP 2025 1:49PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர், உன்னாவ் நகரங்கள் மற்றும் பிரயாக் ராஜ் - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சேவை குறித்த தன்னிச்சையான ஆய்வினை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 2025 ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புற மண்டலங்கள், முக்கிய இடங்கள், பொது போக்குவரத்து மையங்கள் போன்ற இடங்களில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாட்டு அனுபவம் இந்த ஆய்வில் திரட்டப்பட்டது.
இந்த ஆய்வுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்கப்பட்ட சாதனங்களும் நிலையான விதிமுறைகளும் பயன்படுத்தப்பட்டன. அறிக்கையின் விவரம், www.trai.gov.in என்ற ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விளக்கம் அல்லது தகவலுக்கு ஆணையத்தின் ஆலோசகர் (பிராந்திய அலுவலகம்,போபால்) திரு சஞ்சய் குமார் குப்தாவை adv.bhopal@trai.gov.in என்ற மின்னஞ்சலில் அல்லது +91-755-2575501 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166707
***
SS/IR/AG/KR
(Release ID: 2166773)
Visitor Counter : 2