ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்யவும் சிறப்பு இயக்கம் 5.0-ல் ஊரக மேம்பாட்டுத்துறை பங்கேற்கவுள்ளது
Posted On:
15 SEP 2025 1:02PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்யவும் 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 5.0-வில் மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித்துறை பங்கேற்கவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு இயக்கம் 4.0-வின் போது நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அந்த இயக்கத்தின் நிறைவில் பிரதமர் அலுவலக குறிப்புகள், மாநில அரசு குறிப்புகள், பொது மக்கள் குறைகள் தொடர்பான மேல் முறையீடுகள் ஆகியவை நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளில் 96 சதவீதத்துக்கும், பொது மக்களின் குறைகளில் 93 சதவீதத்துக்கும் தீர்வு காணப்பட்டது.
சிறப்பு இயக்கம் 4.0-இன் காலகட்டத்திற்கு அப்பாலும் 2024 நவம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரை சிறப்பு இயக்கம் 4.0 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் 13 குறிப்புகளுக்கும் பொதுமக்களின் 17,489 குறிப்புகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 123 குறிப்புகளுக்கும், மாநில அரசுகளின் 15 குறிப்புகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166694
***
SS/IR/AG/KR
(Release ID: 2166735)
Visitor Counter : 2