நிதி அமைச்சகம்
கொல்கத்தாவில் சுமார் ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்- 10 பேர் கைது
Posted On:
13 SEP 2025 7:15PM by PIB Chennai
கொல்கத்தா மண்டலப் பிரிவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் டிஆர்ஐ, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக, செப்டம்பர் 12, 2025 அன்று நடவடிக்கையை மேற்கொண்டது. அதிகாலையில், டிஆர்ஐ அதிகாரிகள் 3 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
மூன்று நடவடிக்கைகளிலும், ஒட்டுமொத்தமாக, 32.466 கிலோ கஞ்சா, 22.027 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா, 345 கிராம் கோகோயின் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் உட்பட பத்து பேர் (அனைவரும் இந்தியர்கள்), கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகளும் 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் செய்யப்பட்டுள்ளன. மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பரந்த கட்டமைப்பை அகற்றுவதில் டிஆர்ஐ-ன் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
***
(Release ID: 2166355)
AD/PKV/RJ
(Release ID: 2166401)
Visitor Counter : 2