தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

அசாமில் சமூக விரோதக் கும்பலால் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது

Posted On: 13 SEP 2025 5:19PM by PIB Chennai

அசாமில் உள்ள லும்டிங் ரயில்வே நிறுவனம் அருகே 2025 செப்டம்பர் 7 அன்று ஊடகவியலாளர் ஒருவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததாக வெளியான ஊடகச் செயதியின் அடிப்படையில், இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம்  தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. காவல்துறையினரால் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், அது மனித உரிமை மீறல் தொடர்பான கடுமையான பிரச்சனையை எழுப்புகிறது என்பதை ஆணையம் கவனித்துள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு அசாம் காவல்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2025 செப்டம்பர் 9 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியின்படி, பாதிக்கப்பட்டவர் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது பாதுகாப்பு குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளதாகவும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லும்டிங் பிரஸ் கிளப் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததுடன், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பத்திரிகையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கவும் கோரினர்.

***

(Release ID: 2166298)

AD/SMB/RJ


(Release ID: 2166381) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi