நிதி அமைச்சகம்
பொதுத்துறை வங்கிகளின் இரண்டு நாள் சிந்தனை முகாம் 2025 நிறைவடைந்தது
Posted On:
13 SEP 2025 5:02PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை ஹரியானாவின் குருகிராமில் ஏற்பாடு செய்திருந்த பொதுத்துறை வங்கிகளின் சிந்தனை முகாம் 2025 என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்விற்கு நிதிச் சேவைகள் துறை செயலாளர் தலைமை தாங்கினார். பொதுத்துறை வங்கிகளின் மூத்தத் தலைவர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வங்கி பயிற்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏழு குழு விவாதங்கள், மூன்று நிபுணர் அமர்வுகள், ஒரு நேரடி உரையாடல் மற்றும் திறந்தவெளி அமர்வுகள் இடம்பெற்றன. இவை வாடிக்கையாளர் அனுபவம், நிர்வாகம், பயனுள்ள புத்தாக்கம், கடன் வளர்ச்சி, இடர் மேலாண்மை, பணியாளர் தயார்நிலை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல், தேசிய முன்னுரிமைகள் போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியது. டிஜிட்டல் சகாப்தத்தில் வாடிக்கையாளர் பயணங்களை மறுபரிசீலனை செய்தல், நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு சிறப்பை உள்ளடக்குதல், பயனுள்ள புத்தாக்கங்களை வளர்த்தல், நிலையான கடன் வளர்ச்சியை உறுதி செய்தல், இடர் மேலாண்மை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் விவாதங்கள் கவனம் செலுத்தின. செயல்முறைகளை எளிமைப்படுத்துதல், வாடிக்கையாளர் அதிருப்தியை சரியான நேரத்தில் சரி செய்தல், தடையற்ற சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் அவசியத்தையும் விவாதங்கள் சுட்டிக்காட்டின. அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவும், பொதுவான உள்கட்டமைப்பு அல்லது பகிரப்பட்ட பயன்பாடுகளை உருவாக்கவும், பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை வடிவமைக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு சுவாமிநாதன் ஜே; மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன்; இந்தியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் திரு எம். தாமோதரன்; எஸ்பிஐ முன்னாள் தலைவர்கள் திரு ரஜ்னிஷ் குமார், திரு தினேஷ் குமார் காரா, நிதித்துறை, தொழில்துறை, கல்வித்துறை மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்புப் பேச்சாளர்களாக இந்த அமர்வுகளில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2166295
***
AD/SMB/RJ
(Release ID: 2166354)
Visitor Counter : 2