பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் பார்வையிட்டார்
Posted On:
13 SEP 2025 3:03PM by PIB Chennai
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், சமீபத்திய திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குலு-மணாலி பாதையில் வைஷ்ணவ மாதா கோயில் உள்ளிட்ட பல்வேறு , பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்தப் பகுதிகள் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பெரும் சேதத்தை சந்தித்தன. மத்திய அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால், சேதமடைந்த சாலைகளை பழுதுபார்த்து புனரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்கூட்டியே நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் திருமதி தாக்கூர் கலந்துரையாடினார், அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தார். மேலும் தற்போதைய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அவர் ஆய்வு செய்தார்.
***
(Release ID: 2166257)
AD/PKV/RJ
(Release ID: 2166302)
Visitor Counter : 2