பாதுகாப்பு அமைச்சகம்
அகில இந்திய தல் சைனிக் முகாம் புது தில்லியில் நிறைவடைந்தது
Posted On:
11 SEP 2025 3:47PM by PIB Chennai
அகில இந்திய தல் சைனிக் முகாம்-2025, தில்லி கன்டோன்மெண்டில் செப்டம்பர் 11, 2025 அன்று முடிவடைந்தது. நாடு முழுவதும் தேசிய மாணவர் படையின் 17 இயக்குனரகங்களைச் சேர்ந்த 1547 தேசிய மாணவர் படையினர் இந்த முகாமில் பங்கேற்றனர். உறுப்பினர்களின் இயல் மற்றும் மனஉறுதி திறன்களுக்கு சவால் விடும் வகையில் ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன.
நிறைவு விழாவில் தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் வீரர்களிடையே உரையாற்றினார். 12 நாட்கள் நடைபெற்ற முகாமில் பங்கேற்பாளர்கள் பெற்ற அனுபவம், அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு விலை மதிப்பில்லாத அடித்தளமாக விளங்கும் என்று அவர் கூறினார்.
நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதற்காகவும், ஒழுக்கமான மற்றும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் அதன் முக்கிய பங்களிப்பிற்காகவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அதன் பங்கை மேலும் மேம்படுத்துவதற்கும் உலகின் மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படையை அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165650
***
(Release ID: 2165650)
AD/BR/KR
(Release ID: 2165944)
Visitor Counter : 4