மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்துக்கள் : மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

Posted On: 10 SEP 2025 5:09PM by PIB Chennai

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய சொத்துக்களாக வளர்ந்து வருகின்றன என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் பிரித்தெடுக்கப்பட்ட அலுமினியப் பொருட்களின் உலகளாவிய மாநாடு மற்றும் சர்வதேச கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சியில் அலுமினியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு பிர்லாஅதன் பல்துறை திறன் மற்றும் தொழில்களில் பரவலான பயன்பாடு வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான மகத்தான ஆற்றலை அளிக்கிறது என்று குறிப்பிட்டார். அதன் மறுசுழற்சி செய்யக்கூடிய தன்மை, நாட்டின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார்.

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையும் அதில் ஈடுபட்டுள்ளவர்களும் நாட்டின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாக திகழ்கின்றனர் என்று திரு பிர்லா குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின்  தற்சார்பு இந்தியா என்ற மாற்றத்தக்க தொலைநோக்குப் பார்வை புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முன் முயற்சி தற்போது வெளிப்படையான முடிவுகளைத் தருகிறது என்றும் அவர் கூறினார். இந்திய தயாரிப்புகள் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள்உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல்உலகம் முழுவதும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் திரு ஓம் பிர்லா சுட்டிக்காட்டினார்.

***

AD/IR/AG/SH

 


(Release ID: 2165458) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Marathi , Hindi