சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஆறு பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2025 5:55PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் சஞ்சய் ஆனந்த்ராவ் தேஷ்முக், திருமதி விருஷாலி விஜய் ஜோஷி, அபய் ஜெய்நாராயண்ஜி மந்திரி, ஷியாம் சகன்லால் சந்தக், நீரஜ் பிரதீப் தோட், சோமசேகர் சுந்தரேசன் ஆகியோரை மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளார்.

***

AD/IR/AG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2165423) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi