பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் 14வது ஓய்வூதிய அதாலத் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2025 6:03PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் 14வது ஓய்வூதிய அதாலத் புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் 10.09.2025 அன்று நடைபெறுகிறது. இதனை ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை நடத்தவிருக்கிறது. குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிகவும் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள்என்ற கருப்பொருளில் இந்த அதாலத் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது 21 துறைகள்/ அமைச்சகங்களுடன் தொடர்புடைய குடும்ப ஓய்வூதியம் சார்ந்த 894 குறைகள் தீர்வுக்காக எடுத்துக் கொள்ளப்படும். 

 

குடும்ப ஓய்வூதியம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் அல்லது நடைமுறை தாமதங்கள் காரணமாக ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அளவிலான நிலுவைத் தொகையாக இருந்தாலும், ஓய்வூதியம் முறையாக செயல்படுத்தப்பட்டு வழங்கப்படாததால் ஏற்பட்ட நீண்டகால மற்றும் நிலுவையில் உள்ள குறைகளைத் தீர்ப்பதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய தொகையை செலுத்துவதை எளிதாக்குவது இதன் நோக்கமாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165016

***

 

(Release ID: 2165016)

AD/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2165196) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी