மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
‘டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்’ என்ற கருப்பொருளில் சர்வதேச எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
08 SEP 2025 6:32PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச எழுத்தறிவு தினம் 2025 கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறையின் இணையமைச்சரும் (தனி பொறுப்பு), கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி உரையாற்றினார். திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார், கல்வி அமைச்சகம், என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, கேவிஎஸ், மாநில/யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறைகள் முதலியவற்றின் மூத்த அதிகாரிகளும் இதர பங்குதாரர்களும் விழாவில் கலந்து கொண்டார்கள்.
‘டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்குவித்தல்’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றி, உலகளாவிய எழுத்தறிவிற்கான இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் தொலைநோக்குப்பார்வையை எடுத்துரைத்தார். கடந்த 2011-ல் 74%ஆக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023-24-ல், 80.9%ஆக உயர்ந்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
திரிபுரா, மிசோரம் கோவா மற்றும் லடாக்குடன் இணைந்து, முழு எழுத்தறிவை அடைந்த ஐந்தாவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது. ஜூன் 24, 2024 அன்று, முழு எழுத்தறிவு பெற்ற முதல் யூனியன் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164749
***
(Release ID: 2164749)
SS/BR/KR
(Release ID: 2164910)
Visitor Counter : 2