பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை குழந்தைகள் பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு மாணவர்களுடன் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்
Posted On:
08 SEP 2025 5:21PM by PIB Chennai
தில்லியில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியின் (என்சிஎஸ்) வைர விழாவை முன்னிட்டு செப்டம்பர் 8, 2025 அன்று பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவர்களுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். குறிப்பிட்ட இலக்குடன் கனவு காணுமாறும், மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்களது இலக்குகளை நோக்கி பயணிக்குமாறும், தங்களது அனைத்து முயற்சிகளிலும் தேசம் குறித்த பெருமித உணர்வை வெளிப்படுத்துமாறும் மாணவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
ஒழுக்கம், சேவை மற்றும் நாட்டுப்பற்றின் வாயிலாக மாணவர்களின் குணங்கள் மற்றும் விருப்பங்களை வடிவமைப்பதில் தில்லி கடற்படை குழந்தைகள் பள்ளியின் பங்களிப்பை திரு ராஜநாத் சிங் பாராட்டினார். தேச கட்டமைப்பில், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளின் முக்கிய பங்களிப்பை அவர் குறிப்பிட்டார். இத்தகைய நிறுவனங்கள் வெறும் கற்றலுக்கான மையங்கள் அல்ல என்றும், மாறாக அடுத்த தலைமுறையினருக்கு தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்புடைமையின் மாண்புகளை புகுத்தும் தளங்களாக விளங்குகின்றன என்றும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது தில்லி கடற்படை குழந்தைகள் பள்ளியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் சாதனைகள் பற்றி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. தங்களது முழுமையான வளர்ச்சியில் பள்ளி எத்தகைய முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மாணவர்கள் தங்களின் அனுபவங்கள் வாயிலாக அமைச்சருக்கு எடுத்துரைத்தனர். காபி டேபிள் புத்தகத்துடன் கைகளால் செய்யப்பட்ட நினைவு பரிசுகளையும் மாணவர்கள் அமைச்சருக்கு வழங்கினார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164704
***
(Release ID: 2164704)
SS/BR/KR
(Release ID: 2164909)
Visitor Counter : 2