இந்திய போட்டிகள் ஆணையம்
டானா இன்கார்பரேட்டட் நிறுவனத்தை அலிசன் டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு சிசிஐ ஒப்புதல்
Posted On:
09 SEP 2025 10:42AM by PIB Chennai
டானா இன்கார்பரேட்டட் ஆஃப்-ஹைவே (டானா ஓ.எச்) நிறுவனத்தை அலிசன் டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அலிசன் நிறுவனம், வாகன உந்துவிசை தீர்வுகளை அளித்து வருகிறது. மின்மயமாக்கப்பட்ட உந்துவிசை அமைப்புகளை வடிவமைத்து இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. அலிசனின் பெரும்பாலான தயாரிப்புகள், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வணிக வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய பகுதி வாகனங்கள் மட்டுமே, கட்டுமானம், வனவியல், சுரங்கம், விவசாயம் மற்றும் பிற தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அலிசன் நிறுவனத்தின் தலைமையகம், அமெரிக்காவின் இண்டியானாபோலிஸில் உள்ளது. 150- க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், அலிசன் டிரான்ஸ்மிஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு துணை நிறுவனத்தை அலிசன் கொண்டுள்ளது.
டானா நிறுவனம், உந்துவிசை தீர்வுகளை உற்பத்தி செய்வதிலும் வழங்குவதிலும் நிபுணத்துவம் பெற்றதாகும். டானா நிறுவனம் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுவதுடன், உலகளாவிய வாடிக்கையாளர் தளத்தையும் கொண்டுள்ளது. இந்தியாவில், டானா மூன்று துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. அவை முன்மொழியப்பட்ட பரிவர்த்தனையின் ஒரு பகுதியாகும்.
ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.
***
(Release ID: 2164832 )
SS/PKV/KR
(Release ID: 2164868)
Visitor Counter : 2