தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் இந்தியத் தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் நெட்வொர்க் தரம் குறித்த ஆய்வு
Posted On:
08 SEP 2025 3:32PM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலத்தில் போல்பூர் சாந்திநிகேதன் முதல் நியூ ஜல்பைகுரி வரையிலான ரயில் பாதையை உள்ளடக்கிய உரிமம் பெற்ற சேவைப்பகுதியில், சேவை குறித்த சுயேச்சையான ஆய்வினை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு 2025 ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கொல்கத்தாவில் உள்ள மண்டல அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. ரயில் வழித்தடத்தில் ரயில்வே பயணிகள் மற்றும் பிறரின் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாட்டு அனுபவம் இந்த ஆய்வில் திரட்டப்பட்டது.
இந்த ஆய்வுக்கு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்கப்பட்ட சாதனங்களும் நிலையான விதிமுறைகளும் பயன்படுத்தப்பட்டன. அறிக்கையின் விவரம், www.trai.gov.in என்ற ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விளக்கம் அல்லது தகவலுக்கு ஆணையத்தின் ஆலோசகர் (பிராந்திய அலுவலகம், கொல்கத்தா) திரு பிரவீண் குமாரை adv.kolkata@trai.gov.in என்ற மின்னஞ்சலில் அல்லது +91-33-22361401 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
---
SS/SMB/KPG/KR
(Release ID: 2164787)
Visitor Counter : 2