புவி அறிவியல் அமைச்சகம்
சீனாவில் நடைபெற்ற 'சர்வதேச புவிஅறிவியல் ஒலிம்பியாட்' போட்டியில் வென்ற இந்திய அணி மாணவர்களுக்கு அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு
प्रविष्टि तिथि:
07 SEP 2025 1:16PM by PIB Chennai
சீனாவின் ஜினிங்கில் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை நடைபெற்ற 18வது 'சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட்' போட்டியில் வென்ற இந்திய அணியைச் சேர்ந்த மாணவர்களை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு , ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
சர்வதேச புவி அறிவியல் இளைஞர் இயக்கம் 3வது பரிசை வென்றதன் மூலம் இந்திய அணி ஒரு அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இளம் சாதனையாளர்கள் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததற்காக அவர்களைப் பாராட்டினார். மேலும் கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் புத்தொழில் புரட்சிக்குப் பின்னர், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே புதிய ஆர்வவத்தை இந்த முடிவுகள் பிரதிபலிக்கின்றன என்றார்.
தேசிய கல்விக் கொள்கை , இளைஞர்களை கடினமான பாடப் பிரிவுகளின் வரம்புகளிலிருந்து விடுவித்து, பல்வேறு துறைகளை ஆராய உதவுவதன் மூலம் அவர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இது, வழக்கமான படிப்புகளிலிருந்து புவி அறிவியல், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களால் வழிநடத்தப்படும் சுயதொழில் போன்ற அதிநவீனத் துறைகளை நோக்கி ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.
அரசால் வழங்கப்படும் வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்தி, அவற்றை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றுமாறு டாக்டர் ஜிதேந்திர சிங் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
***
(Release ID: 2164472)
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2164504)
आगंतुक पटल : 10