பாதுகாப்பு அமைச்சகம்
பப்புவா நியூ கினியாவின் 50வது சுதந்திர தினத்தில் ஐஎன்எஸ் கத்மத் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
06 SEP 2025 6:09PM by PIB Chennai
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான ஐஎன்எஸ் கத்மத், பப்புவா நியூ கினியாவின் 50வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 04 அன்று மொபைல் கடற்படை ஆய்வை வழிநடத்தியது.
மோர்ஸ்பி துறைமுகத்தின் எல்லைக்குள் நடந்த ஒரு பன்னாட்டு நிகழ்வாக, பல கப்பல்களுடன் முன்னணி கப்பலாக ஐஎன்எஸ் கத்மத் இடம்பெற்றது. நிகழ்வோடு தொடர்புடைய பல்வேறு சவால்களை துல்லியமாக அது கடந்து சென்றது. போர்க்கப்பல்களின் பாதுகாப்பான, துல்லியமான நடைமுறைகளை உறுதிசெய்யும் வகையில், இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
துறைமுகத்தில் முழுமையான தயாரிப்பின் விளைவாக, ஐந்து நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு போர்க்கப்பல்கள், ஒரே நெடுவரிசையில் ஒவ்வொரு கப்பலுக்கும் இடையில் 600 கெஜம் தூரத்தில் துல்லியமாகப் பயணித்தன, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த சல்யூட் நிலைகளை அவை அடைந்தன.
*****
(Release ID: 2164385)
AD/PKV/SG
(रिलीज़ आईडी: 2164395)
आगंतुक पटल : 7