இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
மை பாரத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்
Posted On:
05 SEP 2025 5:45PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் உள்ள மை பாரத் தலைமையகத்தில் உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக உதவுவதற்காக 1,000-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பில் பயிற்சி பெற்ற 'மை பாரத் ஆப்த மித்ராக்கள்' அணிதிரட்டப்படுவார்கள் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இயற்கை பேரிடர் காரணமாக அணுக முடியாத தொலைதூரக் கிராமங்களுக்கு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த இளம் தன்னார்வலர்கள் ஒன்றிணைவார்கள் என்று டாக்டர் மாண்டவியா குறிப்பிட்டார். இந்த இளைஞர்களால் வழங்கப்படும் உதவி, மை பாரத் எவ்வாறு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக பரந்த அளவில் இளைஞர்களைத் திரட்ட உதவியுள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.
2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேரா யுவ பாரத் (எனது இளைய பாரதம்) என்பது தன்னார்வத் தொண்டு, அனுபவக் கற்றல் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் மூலம் இளைஞர்களை இணைக்கவும், அணிதிரட்டவும், அதிகாரமளிக்கவும் வடிவமைக்கப்பட்ட நாடு தழுவிய ஒரு முன்னோடி தளமாகும். 1.7 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் ஏற்கனவே இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர், சாலைப் பாதுகாப்பு, வாக்காளர் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் தேசக் கட்டமைப்பின் பிற முக்கிய துறைகள் குறித்த தேசிய பிரச்சாரங்களுக்கு தீவிரமாக இவர்கள் பங்களித்து வருகின்றனர்.
****
(Release ID: 2164240)
ss/PKV/SG
(Release ID: 2164284)
Visitor Counter : 2