பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-சிங்கப்பூர் இடையிலான 16-வது பாதுகாப்பு பணிக்குழு கூட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது
Posted On:
05 SEP 2025 1:14PM by PIB Chennai
இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையிலான 16-வது பாதுகாப்பு பணிக்குழு கூட்டம் செப்டம்பர் 04 அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) திரு அமிதாப் பிரசாத், சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை அலுவலக இயக்குநர் கர்னல் டாக்சன் யாப் ஆகியோர் இணைந்து இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தக் கூட்டம் ஆய்வு செய்தது. பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய முன்முயற்சிகளின் வேகத்தை விரைவுபடுத்தவும், பாதுகாப்புக் கண்ணோட்டங்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது.
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங் இடையேயான புதுதில்லி சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கான செயல்திட்டம் தொடர்பான கூட்டு அறிக்கை குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. .
பணிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து திருப்தி தெரிவித்தனர். குறிப்பாக பயிற்சி, திறன் மேம்பாடு, தொழில் மற்றும் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புத் துறையில். வளர்ந்து வரும் கூட்டாண்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது.
கூட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் துணை கொள்கை செயலாளர் பி.ஜி. பிரெட்ரிக் சூவையும் இணைச் செயலாளர் சந்தித்தார்.
******
(Release ID: 2164153)
AD/PKV/SG
(Release ID: 2164236)
Visitor Counter : 2