வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க டிபிஐஐடி-யும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
04 SEP 2025 3:06PM by PIB Chennai
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடியும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. புத்தொழில் நிறுவனங்களுக்கும், புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ஆதரவளிக்கும். ஸ்டார்ட் அப் இந்தியா இணைய தளத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கான பயிலரங்குகள் நடத்தப்படுவதுடன் சந்தைப் படுத்துதல் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பேசிய டிபிஐஐடியின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், ஐசிஐசிஐ வங்கி, புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை வழங்குவதன் மூலம் இத்துறையில் சிறந்த தாக்கங்கள் ஏற்படும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163675
***
SS/PLM/AG/DL
(Release ID: 2163852)
Visitor Counter : 2