அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சர்வதேச அறிவியல் விழாவுக்கான தயார் நிலை மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உத்வேகம் அளிப்பது தொடர்பான ஆலோசனை
Posted On:
03 SEP 2025 5:20PM by PIB Chennai
விரைவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கான தயார் நிலை குறித்து அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், தேசிய அறிவியல் விழாவிற்கான அவர்களது ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் ஆகியவை குறித்து மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஆய்வு செய்தார்.
புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய வளாகத்தில் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூத், அறிவியல் துறை செயலாளர்கள், அணுசக்தி துறை மூத்த அதிகாரிகள், விண்வெளி, அறிவியல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப அதிகாரிகள், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமத்தின் பிரதிநிதிகள், புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
சர்வதேச அறிவியல் விழா ஆண்டு தோறும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மக்களை மையமாக கொண்ட வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது தொடர்பாக இதில் விவாதிக்கப்படவுள்ளது.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்து விரிவான உள்ளீடுகளை அமைச்சர் வழங்கினார். நாட்டின் முன்னோடி நிகழ்ச்சியாக உள்ள இந்த விழாவில் பல்வேறு அமைச்சகங்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், இலக்கிய வல்லுநர்கள், சர்வதேச நிபுணர்கள் மற்றும் இளம் தலைவர்கள் பங்கேற்கின்றனர். நவீன தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகள், விரிவான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், சிந்தனையை வளர்க்கக் கூடிய விவாதங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த தலைமைத்துவ பண்பிற்கான புதிய சகாப்தத்தை தொடங்குவது போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெறவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163380
***
SS/SV/AG/DL
(Release ID: 2163465)
Visitor Counter : 2